சில மாதங்களுக்கு முன்னர் மாமனிதர் என ஈரோடு கதிர் அண்ணனாலும், பெருமாள்முருகன் ஐயாவால் சமீபத்தில் விரிவாக தனி தொடராகவே குறிப்பிட்டு எழுதப்படுபவருமான நாமக்கல் முன்னாள் கலெக்டர் சகாயம் அவர்கள் மீண்டும் லைம்லைட்டுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்.
நாமக்கல் கலெக்டராக பணியில் இருந்தபோது எல்லா தரப்பு மக்களின் நண்பனாக விளங்கியவர். சொத்துவிபர பட்டியலை பொதுப்பார்வைக்கு வெளியிட்ட முதல் கலெக்டராக பலரின் புருவத்தையும் உயரவைத்தவர்.
அரசியல்வாதிகளின் உள்ளடி வேலைகளின் காரணமாக எதிர்பாரா விதமாக நாமக்கல் கலெக்டர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டவர் அதன் பின்னர் திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தின் வழக்கமான தேர்தல் நேர அதிரடியான மாற்றத்தில் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த திரு. சி.காமராஜ் ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட, அவருக்கு பதிலாக சென்ற வாரத்தில் மதுரை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.சகாயம் அவர்கள். தனது வழக்கமான அதிரடியை முழுதாய் தொடங்கவில்லை என்றாலும் வழக்கமான விழிப்புணர்வினை பரப்பும் செயல்களைத் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார் சகாயம்.
உதாரணம்: நேற்று மாணவர்களிடையே தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசியது.
தினமலர் நாளிதழ் +2 முடித்த மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பது பற்றி நடத்திய வழிகாட்டி என்னும் நிகழ்ச்சி மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்துகொண்டு இருந்தது. தேர்தல் பணி காரணமாக, அவ்வழியே சென்று கொண்டிருந்த கலெக்டர், திடீரென நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார். ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள், பெற்றோர்களிடம் அவர் பேசியதாவது:

உலகின் பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம், என்ற பெருமை நமக்கு உள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமே தேர்தல் தான். சுதந்திரமாக தேர்தலை நடத்த, எங்களைப் போன்ற அலுவலர்களை தேர்தல் கமிஷன் பணித்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தலை சிலர் மட்டுமே சேர்ந்து நடத்த முடியாது. அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. அதே போல நமது தேசத்திற்கு உள்ள அடையாளம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை. அத்தகைய ஜனநாயகம் போற்றப்பட வேண்டுமென்றால் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்தால்தான் அது உண்மையான ஜனநாயகமாகும். இப்பணியை மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, போலீஸ் துறையால் மட்டுமே செய்து விட முடியாது. அனைவருடைய பங்களிப்பும் இதில் இடம்பெற வேண்டும். 2 நாட்களில் 200க்கும் மேற்பட்ட வந்த புகாரின் அடிப்படையில் பல இடங்களுக்கு சென்று நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டேன். உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் கடமை உள்ளது. நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில், 18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களையும் ஓட்டளிக்க சொல்லுங்கள். நேர்மையான ஓட்டுப்பதிவு முக்கியம். அன்பளிப்பு பெற்றாலும் அது லஞ்சம் தான். அதைப் பெறாமல் ஓட்டளியுங்கள். லஞ்சம் பெற்று அளிக்கும் வாக்கு; தேச நலனுக்கு தூக்கு.எந்த மாற்றத்தையும் இளைஞர்கள் தான் உருவாக்க முடியும். "லஞ்சம் இல்லாத ஓட்டளிப்போம்' என மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புங்கள் என்றார்.
இதற்கு முன்னரும் ஒரு தேர்தல் நேரத்தில்(திருமங்கலம் இடைத்தேர்தல் என நினைக்கிறேன்) நாமக்கல் கலெக்டராக பணியாற்றிய திரு. சுந்தரராமன் மதுரை கலெக்டராக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டதாக நினைவு. இம்முறை அதே நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய சகாயம் அவர்கள் மதுரைக்கு கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:
நல்லவைகளை வரவேற்கவும் limelight ல் கொண்டு வரவும் முயற்சிகள் செய்வோம்.
//அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. அதே போல நமது தேசத்திற்கு உள்ள அடையாளம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை.//
இதனை நாம் உணர்வதை விட அரசியல்வாதிகள் உணராமல் போவதும் இவர்களை முன்னிலைப்படுத்தும் மக்கள் மனப்பாங்குமே ஜனநாயகத்தின் ஆணி வேரை அசைத்துப்பார்க்க வைக்கின்றது.
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment