Tuesday, February 1, 2011

காதலின் உச்சநிலை

காதலின் உச்சநிலை
காமம்
காவியத்தின் முதல்படி
காமம்
காதலில் இயைந்த
காமம்
என்றும் தந்துபோகும்
கட்டவிழ்ந்த குதிரையின்
காற்று வேகத்து
இன்பம் தனை

அள்ளிக் கொடுப்பதில்லை
காமம்
தாழ்ந்து பெறுவதில்லை
காமம்
இருவரின் இன்பத்தை
ஓருடலாய் இழைந்து
பகிர்வதே
காமத்தின் ரிஷிமூலம்

உடல்களின்
இயக்கத்தில்
பீறிடும் வியர்வையின்
ஊடே வெளிப்படும்
சிறு துளிகளின்
சேர்க்கைகளில்
இன்பமான
ஓர்துளியின்
இணைவே
காமம் என
படித்தும் பாமரனாய்
ஒரு துளிக்குள் மட்டும்
அடங்கிப் போகாமல்
முழுதாய் நீர்த்துப்
போகுமுன்னே
நீச்சலடித்து
காமக்கடலில்
மூழ்கியெழுபவனே
இன்ப முத்துக்களை
சேகரித்துக்
கொண்டிருக்கிறான்

No comments:

Post a Comment