பண்பாடு கலாச்சாரம்
என பலப்பல
பொய்ப் போர்வைகள்
போர்த்தியே பார்த்துவிட்டதில்
மறைந்துவிடுகின்றன
அல்லது
தெரிந்தும் முழுதாய்
மறைக்கப்படுகின்றன
மூடிய கதவுகளில்
நான்கு சுவற்றுக்குள்
காரிருளில்
அல்லது
ஒளிவெள்ளத்தில்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
நிர்வாண வக்கிரங்கள்
கூடவே வெளியில்
சொல்லவியலா
வரைமுறையற்ற
அதீத வன்முறைகளும்
2 comments:
வலையுலகுக்கு புதிதாக வந்திருக்கும் உங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கின்றேன். நல்ல விஷயங்களை எழுதி, புகழ் பெற்று விளங்க வாழ்த்துக்கள்! முதலாவதாக நீங்கள் எழுதியிருக்கும் இந்த கவிதை கூட நன்றாக இருக்கிறது. கலாச்சாரம் என்ற பெயரில் நாம் கடைப்பிடித்துவரும் நடைமுறைகளை நீங்கள் வெறுப்பவர் போலிருக்கிறது. எழுதுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்!! அப்படியே நம்ம வீட்டுக்கும் ஒருவாட்டி வந்திட்டுப் போங்க!
http://krrajeevan.blogspot.com/
நண்பா ராஜீவனின் வாழ்த்தோடு என்னுடையதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
Post a Comment